இணையக் கால கவியரங்கம் 63
21/12/23
எஸ்ஸார்சி
மொழிபெயர்ப்பு
இலக்கியப் படைப்பொன்றை
எழுதிவிடலாம்
மொழிபெயர்ப்போ
கடினமானது
ஒரு படைப்பாளி
மூலமொழியில் வாசகர்க்குத் தந்ததை
வேறு ஒரு மொழியில்
மொழிபெயர்ப்பாளன்
கடத்தித்தர வேண்டும்
மூலமொழியின் பண்பாடும் அது புழங்கு
நிலவியலும்
அப்படைப்பாளியின்
ஆன்மாவும் வசமாகவேண்டும் முதலில்
தன் கருத்தை நுழைக்காது
மொழிபெயர்ப்பு விரதம்
காக்க வேண்டும்
மொழிபெயர்ப்புத்தான்
இதுவென வாசகன்
உணரவே கூடாது
படைப்பு நெஞ்சில்
நிறையவேண்டும்
வாசகனை
மெய்யான வாசகன்
வாழ்த்துவான் மொழிபெயர்ப்பாளனை.
கா ஸ்ரீ ஸ்ரீ மராத்திய
காண்டேகரை தமிழ் உலகில் நிலைக்கச்செய்தார்
மொழிபெயர்ப்பின்
உச்சம் அது.
No comments:
Post a Comment