இணையக்காலகவியரங்கம். 48
6/12/23
எஸ்ஸார்சி
அவர்கள் நியாயம்
கைரேகை வைத்துத்தான்
பொருள் பெறவேண்டும்
அந்த வக்கணையில்
ஒன்றும் குறைவில்லை.
வீட்டில் ரெண்டுபேர்
இருவருக்குமே நீரிழிவு
அவர்களுக்கு ஏன் சீனிவிநியோகம்
ரேஷன்கடை அரிசிவாங்கி
மாட்டுக்கும் பன்றிக்கும்
போடுகிறார்கள்
எல்லோரும் அப்படியில்லை
நிச்சயம் பலர் செய்கிறார்கள்.
அரசுக்குத் தெரியாதா என்ன
ஆகத்தகுதியுடைய இல்லாதவனுக்கு
மட்டுமே அரிசி இனாம்
அரசாங்கம் என்று சொல்வதுவோ?
வோட்டு எல்லோருக்கும்
இருக்கிறதே.
ரேஷன்கடை பாமாயிலை
சாமி விளக்குக்குப்பயன்
படுத்துகிறார்கள்
யாருக்குத் தேவையோ
அவர்கட்கு அதுபோய்ச்சேர்வது இல்லை.
ஒருவரின் வருமானம்தெரிந்து
அவருக்கு இலவசமாய்
அரிசி தருகிறதா அரசாங்கம்
இல்லவே இல்லை
மக்கள் வாங்காத அரிசி
மொத்தமாய் எங்கோ போகிறது
எத்தனைக்காலமாய்
இப்படிக்கொள்ளை.
அரசு தரும் ஆயிரம் ரூபாய்
உரிமைத்தொகை பெறுவோரில்
பாதிபேருக்குமேல்
பித்தலாட்டம்.
மகாத்மாகாந்தி நூறுநாள்
வேலைத்திட்டத்துக்கு
இன்னொரு வடிவம் இது.
நாம் எவ்வளவோ கொள்ளை அடிக்கிறோம் இதெல்லாம்
ஜுஜுபி இருக்கட்டும்
என்பதுவே அவர்களின்
நியாயமாய்.
No comments:
Post a Comment