கவிதை -தலைகீழாய் உலகம்
சென்னையில் இடம் வாங்கி
வீடு கட்டிய லடசணத்திற்கு
இராப்பகலாய்த்தூக்கமில்லை
இரண்டாயிரத்து பதினைந்தை
எங்கே மறப்பது
இப்படியாய் நான் யோசிக்கும்போது
இரண்டாயிரத்து இருபத்து மூன்று வெள்ளம் வந்து
கொன்று போட்டது சென்னையை
திருச்சிக்கு மாற்றலாம் தமிழ்நாட்டின் தலைநகரை
எம் ஜி ஆர் சொன்னபோது
அவரைக்கேலிபேசியவர்கள் நாம்
இட ஒதுக்கீட்டில் வருமானத்தை முற்போக்காய் எண்ணி
இணைக்க விரும்பிய நல் மனத்தை
புதுவையில் தோற்கடித்தோம்
எந்தப்பாவமும் யாரையும் சும்மா விடாது
முடிச்சூர் வீட்டை நல்ல வெயில் நாளில் விற்றுவிட்டு
அரவம் தெரியாமல் வெளியூர் போய்விடலாம்
யோசனையில் தீவிரமாய் இருக்கிறேன்
ரியல் எஸ்டேட் பணிபுரியும்
இளம்பெண்கள் ஓயாமல் போன் போடுகின்றனர்
பாதி சென்னையும் வெள்ளத்தில் நாறுகின்ற தருணமே
‘சென்னையில் பிளாட் சார்’
நீட்டி முழக்கி முடிக்கின்றனர்
அவர்களுக்குச் சம்பளம் தருகின்றானே ஒருவன்.
-----------------------------------------------------
எம் ஜி ஆர்
No comments:
Post a Comment