Tuesday, December 5, 2023

கவிதை -முரண்படுவோம் மார்க்ஸோடு

 

 

 

 

 

 

 

  முரண்படுவோம் மார்க்ஸோடு.               

மதம் ஒரு போதை

மதம் நசுக்கப்பட்டவர்களின் அபயக்குரல்

மதம் இதயமற்ற உலகின் இதயம்

மதம் ஆன்மாக்கள் வீழிடம்

துளிர்க்கும்  புத்தான்மா

மார்க்ஸ்தான் சொன்னார்

மண்டையில் ஏற்றினோம்

அது மட்டுமன்று மதம்

மதம் அரசுக்கு எடுபிடி

மக்களை மதம் மயக்கத்தில் வைக்கும்

முதல்  ஆட்சி  செய்யும்

சொன்னார் மார்க்ஸ்

மதம் அரசுக்கு

முதலாகும் சொன்னாரா?

வாக்கு வங்கியை மதமே

நிரப்பும் சொன்னாரா?

முதலாளிகள் மதங்களை ரட்சிக்கிறார்கள்

மதங்கள் முதலாளிகளை ரட்சிக்கின்றன

செங்கோல் தாங்கும் கோமாளிகள் மட்டும்

மேடையில் மாறி மாறி

காட்சியாகிறார்கள்  காண்போர்க்கு.

---------------------------------------------------------------------------------------------------

 

No comments:

Post a Comment