Saturday, December 16, 2023

கவிதை - கலிகாலம்

இணையக்கால கவியரங்கம் 58

16/12/23


எஸ்ஸார்சி


கலிகாலம்


கார்ப்பரேட் என்ற ஒன்றைச்

சிருட்டித்து

லாபம் நஷ்டம்

நல்லது கெட்டது

எல்லாவற்றிர்க்கும்

பொறுப்பாக்கி முதலாளிகள் சவுகரியமாய்

ஒதுங்கி நிற்கிறார்கள்

திருமணம் என்கிற

புனித உறவைப் புறந்தள்ளி  நோ கிட்ஸ் நோ கிச்சன் குரூப்-லைஃப் காண்ட்ராக்ட்- லிவிங்டுகெதர் என்று எது எதுவோ கொண்டுவந்து விட்டார்கள்

பெற்ற தாய் எனும் கடவுள்

ஸ்தானத்தை நீர்க்க வைத்துக் கம்பீரமாய் வாடகைத்தாய் வழக்கத்திற்கு வந்து

விட்டது

முதியோர் இல்லத்தைக்

கேலி பேசிய காலம்போய்

அதுவே நல்ல தீர்வு என்னும் சகஜநிலை

வந்தாயிற்று

ஆண் விந்துவையும் பெண்முட்டையையும்

மருத்துவ வங்கியில்

சேமிக்கிறார்கள் எப்போதோ இறந்துபோன

தாயுக்கும் தந்தைக்கும்

வாடகைத்தாய் வழி வாரிசு

உண்டென்பது உறுதியாயிற்று

மரபுகள் நீர்த்துப்போகும்

கலிகாலம் கண்முன்னே

புலிவாலைப்பிடித்த நாயராய் நாம்.


No comments:

Post a Comment