Tuesday, December 5, 2023

கவிதை --நிதர்சனம்

 இணையக்கால கவியரங்கம்

3/12/23


நிதர்சனம்

வருகிறது புயல்
மிக்ஜாம் புயல்
தொடக்கத்தில் சென்னைக்கும் மசூலிப்பட்டினத்திற்கும்
இடையே கூத்தாடி
வரும் என்றார்கள்
அப்புறமாய் அறிவியலார்
நெல்லூrருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும்
இடையே தான் அது என்கிறார்கள்
இன்னும் மாற்றங்கள் வரும் வரலாம்
இலங்கையில் காலூன்றி
புயல் தமிழ்நாடு ஆந்திரா ஒரிசா வங்காளம்
எனத்தாண்டித்தாணடி
வங்கதேசத்துக்கு
வழக்கமாய்ப் போவதுண்டு
இதற்குப்பின்னால்
அரசியல் எதுவுமில்லை
கார்ப்பரேட் சூழ்ச்சி இல்லை
ஆரியசதியோடு. அமெரிக்க
சதியுமில்லை
தீவிரவாதிகள் கைவரிசை
இல்லை
என்பதுமட்டுமே
நிதர்சனம்.

No comments:

Post a Comment